ஊடகவியலாளர் அஸ்ஹருக்கு விசேட து ஆப் பிரார்த்தனை

(அஸ்லம் எஸ்.மௌலானா)

திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற சிரேஷ்ட ஊடகவியலாளரும் கவிஞரும் இளைஞர் சேவைகள் மன்ற சிரேஷ்ட உத்தியோகத்தருமான ஏ.அஸ்ஹர் பூரண சுகம்பெற வேண்டி அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் ஏற்பாடு செய்திருந்த விசேட துஆப் பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம். ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம்பாவா மௌலவி துஆப் பிரார்த்தனையை நடத்தி வைத்தார்.

இதில் ஊடகவியலாளர் ஏ.அஸ்ஹரின் குடும்பம் சார்பில் அவரது உறவினரான முன்னாள் பிரதேச செயலாளர் எம்.எம். தௌபீக் கலந்து கொண்டு குறித்த ஏற்பாட்டுக்காக நன்றி தெரிவித்து ஏற்புரை நிகழ்த்தினார்.

அமைப்பின் செயலாளர் ஏ.எல்.எம். சினாஸ் நன்றியுரை நிகழ்த்தினார். சிரேஷ்ட உறுப்பினர் யூ.கே. காலித்தீன், நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.