மட்டு. இராமகிருஷ்ண மிஷனினால் கலாநிதி ஜெயசிறிலுக்கு கௌரவம்!

( காரைதீவு  சகா)

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி ஸ்ரீPமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ்ஜிடம் ஆசீர்வாதம் பெற்ற கலாநிதி ஜெயசிறிலுக்கு திடீரென அதிர்ச்சிக் கௌரவம் அளிக்கப்பட்டது.

இந் நிகழ்வு கடந்த வெள்ளியன்று இடம் பெற்றது.

அண்மையில் சமூக சேவைக்காக கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்ற காரைதீவு முன்னாள் தவிசாளரும் சமூக செயற்பாட்டாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சுவாமியின் ஆசீர்வாதம் பெறுவதற்காக
காரைதீவிலிருந்து கல்லடி இராமகிருஷ்ண மிஷனுக்கு சென்றார்.

அங்கு  சுவாமி நீலமாதவானந்தா ஜீ யின் காலில் வீழ்ந்து   பாத நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் பெற்றார். கூடவே சமூக செயற்பாட்டாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜாவும் சமுகமளித்திருந்தார்.

ஆசிர்வாதம் வழங்கிய சுவாமிகள் திடீரென நேரடியாக இல்ல மாணவர்கள் மத்தியில் ஒரு கௌரவிப்பு நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

எதிர்பாராத விதமாக  அங்கு  சுவாமிகள் அவருக்கு பொன்னாடை போர்த்தி தெய்வத்திருமூவரடங்கிய திருவுருவப்படம் வழங்கி நினைவு பதக்கத்தையும் அணிவித்து கௌரவித்தார். அங்கு உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ்ஜும் சமுகமளித்திருந்தார்.

அங்கு அவரது சேவைகள் பற்றி உரையாற்றினார்கள்.
மேலும் சமூக சேவைகள் மேற்கோள்ள பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் அருள் புரிவார் என ஆசி வழங்கினார்.

இல்ல மாணவர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.