அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலய புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு!

 

கே எ ஹமீட்

2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிப்பதுடன், இந்த மாணவர்கள் சித்தியடைவதற்கு வழிப்படுத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலை அதிபர் திருமதி ஹாபிலா முகம்மட் சிறாஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து சிறப்பித்ததுடன், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் ஷாபிர் , மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஏ.சி.றியாஸ், முன்னாள் பிரதேச உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் ஆகியோருடன் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.