சாய்ந்தமருது எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலய வித்தியாரம்ப விழா!

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது லீPடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று(வியாழக்கிழமை) கல்லூரியில் இடம்பெற்றது.

இதன்போது பாரம்பரியக் கலையான சாய்ந்தமருது முஹம்மதியா கலைமன்ற கோலாட்டக் கலைஞர்களின் கோராட்டம் மற்றும் சிலம்பாட்டம் போன்ற கலைகளால் அதிதிகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மயோன் குரூப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கல்முனை சாஹிரா தேசியப் பாடசாலையின் முன்னாள் அதிபர் எம். .எம் இஸ்மாயில் மற்றும் சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ. மலிக், ஆரம்ப கல்வி வளவாளர் எஸ்.எம்.எம். அன்ஸார், ஊடகவியலாளர் நூருல் ஹூதா உமர் ஆகியோர் நிகழ்வில் கௌரவ அதிதிகளாவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதோடு, தரம் இரண்டு மாணவர்களால் புதிய மாணவர்கள் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டனர்.