பெண் விரிவுரையாளர் விபத்தில் பரிதாப சாவு!

 

தலவத்துகொட விக்கிரமசிங்கபுர சந்தியில் வீதியைக் கடந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீட உதவி விரிவுரையாளர் லக்மினி போகமுவ, வாகன விபத்தில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்துக்கு அருகிலிருந்த சிசிடிவி கமெராவில் சம்பவம் பதிவாகியுள்ளது.

உதவி விரிவுரையாளர் வெள்ளைக் கோட்டில் வீதியைக் கடக்காமல், வீதியின் மறுபுறம் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் வீதியை கடக்க முயற்சித்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.

வாகனத்தை செலுத்தியவர் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர் என பின்னர் தெரிய வந்தது.