மூதூர் சண்பகவல்லி வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் விழா

(கிண்ணியா நிருபர்)

மூதூர் சண்பகவல்லி வித்தியாலயத்தில் தரம் – 01 மாணவர்களை வரவேற்கும் விழா இன்று (வியாழக்கிழமை) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் கே.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலை அபிவிருத்தி மேம்பாட்டு அதிகாரி எஸ்.எம்.நௌபர் கலந்து கொண்டார்.

அத்தோடு பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோத்தர், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், உறுப்பினர்கள், முன்பள்ளி ஆசிரியை, பொலிஸ் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.