கத்தாரில் நடைபெறவிருக்கும் உலக அளவிலான இணைய மாநாட்டில் இலங்கை ஊடகவியலாளர்!

(எஸ்.அஷ்ரப்கான்,ஏ.எம். அஜாத்கான்)

உலகின் மிகப் பெரிய இணைய தொழில்நுட்ப மாநாடான ‘வலை உச்சி மாநாடு’ இவ்வருடம் கத்தாரில் தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் நான்கு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் முதன் முறையாக இலங்கையர் என்ற வகையில் ஊடகவியலாளர் ஜே.எம். பாஸித் கலந்துகொள்ள உள்ளார்.

மேலும் இம்மாநாட்டில் கத்தார் நாட்டின் பிரதமர், விண்வெளிக்குச் சென்ற முதல் அரபுப் பெண்மணி சாரா சப்ரி, டிக்டோக் நிறுவனத்தின் பிரதிநிதிகள், பிரபல ஃபேஸ்புக் தளமான மெட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி என உலக அளவில் முன்னிலையில் உள்ள பிரதிநிதிகளும் 12,000இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும் 80 நாடுகளுக்கும் மேற்பட்ட 1,000 புதிய தொழில் முனைவோர்களும்
சமீபத்திய இணைய தொழில்நுட்பம் பற்றி விவாதிக்க ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள தொழில்நுட்பத் தலைவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.