இலவச சீருடை; இலவச புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைத்தல்!

(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் மற்றும் காரைதீவு கோட்டங்களைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களுக்கு  இலவச சீருடையும் இலவசப் புத்தகங்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றது.

நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் பாடசாலை கலாசார மண்டபத்தில்  பாடசாலை அதிபர் எம்.டீ.நௌபல் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு நிந்தவூர் பிரதேச  ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி  எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான சீருடை மற்றும் புத்தகங்களையும் வழங்கி வைத்தார்.

கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.றியாஸா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம் சஜித் , இணைப்புச் செயலாளர் பீ.எம்.எம்.ஜஃபர் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் கோட்டமும் காரைதீவு தமிழ் கோட்டங்களைச் சேர்ந்த 41 பாடசாலை மாணவர்களுக்கு இந்த விநியோக நடவடிக்கைகள் இடம்பெற்றன.

பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரது பங்கேற்புடன் நடைபெற வேண்டுமென்ற கல்வியமைச்சின்  பணிப்புரைக்கமைய நிந்தவூர் மற்றும் காரைதீவு  பாடசாலைகளுக்கான இலவச சீருடை மற்றும் இலவச நூல் விநியோக நிகழ்வு  இங்கு இடம்பெற்றது.