பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு தெல்லிப்பழை  மகாஜனா தெரிவு!

(அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் அகில இலங்கை ரீதியில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி  தகுதிபெற்றுள்ளது.

அனுராதபுரத்தில் நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் குருணாகல் கவுசிகமுவ மகா வித்தியாலயத்தை எதிர்கொண்ட  தெல்லிப்பழை மகாஜனா 7:0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இறுதிப்போட்டியில்  களுத்துறை சென். ஜோன் கல்லூரி அணியை மார்ச் மாதம் 9 ஆம் திகதி கொழும்பில்  சந்திக்கவுள்ளது.