புதிய கூட்டணியின் ஹை பார்க் கோணர் பேரணிக்கு மக்கள் வெள்ளம் திரண்டது!

 

புதிய கூட்டணி பேரணி ஹை பார்க் கோணரில் நடந்தது.

அரசாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதத் மஞ்சுள, உதயகாந்த குணதிலக்க மற்றும் மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, மேல்மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுமித் லால் மெண்டிஸ் ஆகியோர் புதிய கூட்டணியில் இணையவுள்ளனர்.

புதிய கூட்டணியின் இரண்டாவது பொதுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் ‘வலுவான பொருளாதாரம் – வெற்றிகரமான பயணம்’ என்ற தொனிப்பொருளில் ஆரம்பமானது.

புதிய கூட்டணி பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையால் ஹைட் பார்க் மைதானம் இடைவெளி இன்றி மக்களால் நிரம்பி வழிந்தது.

அரசாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதத் மஞ்சுள, உதயகாந்த குணதிலக்க, மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, மேல்மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுமித் லால் மெண்டிஸ், முன்னாள் மேயர்கள், கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என 58 பேர் இணைந்து கொள்ளவுள்ளனர். புதிய கூட்டணி திட்டத்திற்கு ஆதரவாக குழு ஒன்று கூடியுள்ளது.

இதேவேளை, புதிய கூட்டணியின் கொழும்பு மாவட்டத் தலைவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, புதிய கூட்டணியின் செயற்பாட்டுத் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா, புதிய கூட்டணியின் ஸ்தாபகர் நிமல் லான்சா, புதிய கூட்டணியின் கம்பஹா மாவட்டத் தலைவர் அமைச்சர் நளின் பெர்னாண்டோ, கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சூகீஸ்வர பண்டார, ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க, ஸ்ரீநாத்.திரு உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

கருடர மகா சங்கரத்ன உட்பட 38 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள், தொழிற்சங்க தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கலைஞர்கள், சட்டத்தரணிகள், தொழில் வல்லுனர்கள், 19 சார்பு அமைப்புக்கள், ஆதரவாளர்கள் என பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.