இன்றுடன் நிறைவடைந்தது தேசிய சாரணர் ஜம்போரி

!

எம். எப். றிபாஸ்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பத்தாவது தேசிய சாரணர் ஜம்போரி திருகோணமலையில் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (திங்கட்கிழமை)யுடன் முடவடைந்துள்ளதது.

பிரதம சாரண ஆணையாளர் ஜனப்ரீத் பெனாண்டோ தலைமையில் நடைபெற்ற இச்சாரணர் தேசிய ஜம்போயில் இலங்கை நாட்டின் முதன்மைச் சாரணர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ச்சியாக ஏழு நாள்கள் நடைபெற்ற தேசிய சாரணர் ஜம்போரியில் பனிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் சாரணர்கள் கலந்து கொண்டனர்.

ஆசிய மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சாரணர்களும், சாரணியத் தலைவர்களும் பங்கு பெற்றிருந்ததோடு இலங்கையின் பல மாவட்டங்களிலிருந்தும் சாரணர்கள், பெண் சாரணர்கள், திரி சாரணர்கள். குருளைச் சாரணர்கள். கடல் சாரணர்கள் என எல்லா வகையான சாரணர்களும் கலந்து கொண்டு ஒற்றுமையாக தங்களது சாரணர் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சாரணர் ஜம்போரி வரிசையில் ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி 2016 ஆம் ஆண்டு வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று இருந்தது. அந்த வரிசையில் முதலாவது தேசிய சாரணர் ஜம்போரி 1952 ஆம் ஆண்டு கொழும்பிலும் இதே போன்று 1962 ஆம் ஆண்டு இரண்டாவது தேசிய சாரணர் கொழும்பிலும் நடைபெற்றன. மூன்றாவது தேசிய சாரணர்ஜம்போரி அனுராதபுரத்திலும் 1983 ஆம் ஆண்டு நடைபெற்றது.

நான்காவது தேசிய சாரணர் ஜம்போரி குருநாகலில் 1992 ஆம் ஆண்டும் ஐந்தாவது தேசிய சாரணர் ஜம்போரி 1998 ஆம் ஆண்டு கண்டியிலும் ஆறாவது தேசிய சாரணர் ஜம்போரி 2022 ஆம் ஆண்டு பலப்பிட்டிலும் நடைபெற்றன.

அத்துடன் ஏழாவது தேசிய சாரணர் ஜம்போரி நுவரலியாவில் 2006 ஆம் ஆண்டும், எட்டாவது தேசிய சாரணர் ஜம்போரி 2010 ஆம் ஆண்டு அம்மாந்தோட்டை அங்குன கொலபெலஸவிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.