ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சந்திரகுமாருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரமான மு.சந்திரகுமார்  மற்றும் சமத்துவக் கட்சியின் தலைவர் சு. மனோகரன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை கொழும்பில்
சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சனிக்கிழமை காலை இடம்பெற்ற இச் சந்திப்பின் போது கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடக்கின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள், பிரதேச அபிவிருத்தி பற்றி பேசப்பட்டதோடு, எதிர்கால அரசியல் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.