போதை அடங்கிய மாத்திரைகளுடன் கொட்டாஞ்சேனையில் ஒருவர் கைது!

கொழும்பு, கொட்டாஞ்சேனை  பகுதியில்  50 லட்சம் ரூபா பெறுமதியான  2180  போதை  மாத்திரைகளுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை  இவர் கைது செய்யப்பட்டார் எனக் கொழும்பு வடக்கு  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதான கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.