இலவசமாக பால்மா   பக்கெட் விநியோகம்

(சர்ஜுன் லாபீர்)

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனீபாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து முயற்சிகளுக்கு உதவுவதற்காக லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 288 குடும்பங்களுக்கான இலவச பால் மா விநியோகம் செய்யும் நிகழ்வு கடந்த 23 ஆம் திகதி பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பால் மா பாக்கெட்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந் நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக கணக்காளர் ஐ.எம் பாரிஸ் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.எம் நவாஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.