மூதூர் பிரதேச செயலக நடமாடும் சேவை நிகழ்வு!

( மூதூர் நிருபர்)

பிறப்புச்சான்றிதழ்கள் இல்லாத மக்களுக்கு காலங்கடந்த பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக்கொடுப்பதற்கான தகவல்களை திரட்டுவது தொடர்பிலான ஆரம்ப  நடமாடும் சேவையானது மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  பாட்டாளிபுரம் கிராம சேவையாளர் காரியாலயத்தில் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அலாவுதீன் தலைமையில்  செவ்வாய்கிழமை  நடைபெற்றது.

இதற்கு ஒபர் அமைப்பு அனுசரணை வழங்கியது. இதில் நல்லூர், பாட்டாளிபுரம், நீனாக்கேணி, வீரமா நகர் மலை, முந்தல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டதாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் கூறினார்