அறபா வித்தியாலய பழைய மாணவர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி!

அபு அலா –

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நாளை வியாழக்கிழமை தொடக்கம் 03 ஆம் திகதி வரை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் உபசெயலாளர் ஏ.அர்ஷாட் தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ள இப்போட்டிகளில் 21 பழைய மாணவ அணிகள் பங்கேற்கவுள்ளன. இப்போட்டிகள் யாவும் பகல் நேரப் போட்டிகளாக இடம்பெறவுள்ளனன எனவும், இச்சுற்றுப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூபா 75,000 பணப் பரிசும், சம்பியன் கிண்ணமும் வழங்கப்படும். இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூபா 50,000 பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படும் என்றும் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பழைய சங்கத்தின் உபசெயலாளர் ஏ.அர்ஷாட் தெரிவித்தார்.