தனியார் கல்வி நிலையங்களுக்கு ஞாயிறுகளில் விடுமுறை வழங்குக! அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களிற்கு விடுமுறை வழங்கி அறநெறிக் கல்வியை ஊக்குவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் உள்ள தொல்பொருள் திணைக்களத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய குறித்த பேரணி வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது. அங்கு மாவட்ட செயலாளருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் இடம்பெறுவதால் அறநெறிக் கல்வியை பயில்வதற்கு மாணவர்களால் வருகைதர முடியாதுள்ளது. இதனால் சிறுபிள்ளைகள் உரிய வழிகாட்டல்கள் இன்றி தவறான வழியில் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்ப்படுகின்றன.

எனவே ஞாயிற்றுகிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை நிறுத்தி அன்றையதினம் அறநெறிக்கல்வியை போதிப்பதற்கு வழி ஏற்படுத்தி தருமாறு ஆர்பாட்டகார்களால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த ஆர்பாட்டத்தில் பௌத்த மதகுரு மற்றும் சிங்கள் மக்கள் பலரும்  கலந்து கொண்டனர்.