சுமந்திரன் எம்.பியின் தாயாருக்கு தமிழ் சி.என்.என். நிர்வாகி அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் காலமானார்.

அன்;னாரின் புகழுடலுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகரும் தமிழ் சி.என்.என். இணையத்தின் நிர்வாக இயக்குநருமாகிய கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி இன்று (புதன்கிழமை) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பல்வேறு அரசியல் பிரமுகர்களும் மதத் தலைவர்களும் அஞ்சலி செலுத்;திவரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோர் அஞ்;சலி செலுத்துவதையும் படங்களில் காணலாம்.