கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் வருடாந்த அணிவகுப்பு மரியாதை பரிசோதனை

பாறுக் ஷிஹான்

2024 ஆண்டிற்கான  அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு மற்றும் மரியாதை அணிவகுப்பு  புதன்கிழமை கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானம் மற்றும் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில்   கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்   தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  தமயந்த விஜய ஸ்ரீ  கலந்து கொண்டு   அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள்  சுற்று சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளைப் பார்வையிட்டதுடன்  பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் சவளக்கடை, சம்மாந்துறை, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, பொலிஸ் நிலைய பொலிஸாரும்  இணைந்திருந்தமை குறிப்படத்தக்கது.

இது தவிர இந்நிகழ்வில்  பொலிஸ் மோப்பநாய் பிரிவும் இணைந்து கொண்டமை விசேட சிறப்பம்சமாகும்