தமிழரசுக் கட்சித் தடைகளைத் தகர்க்க தவராஜா தலைமையிலான குழு களத்தில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிய தலைவர் மற்றும்; முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாடு என்பவற்றுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்த வழக்கில் கட்சியின் இருப்பைக் காப்பாற்றுவதற்காக தமிழரசுக் கட்சியின் சட்ட ஆலோசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தலைமையிலான சட்ட விற்பன்னர்கள் களத்தில் இறங்கியுள்ளார்கள்.