சந்தாங்கேணி நீச்சல் தடாகத்தை ஜூனுக்கு முன்னர் திறக்க ஏற்பாடு!

நூருல் ஹூதா உமர்

கல்முனை சந்தாங்கேணி பொதுவிளையாட்டு மைதான நீச்சல்தடாகத்தை எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் விதமாக நிர்மாணப்பணிகள் முடுக்கிவிடப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், விளையாட்டுத்துறை முன்னாள் பிரதியமைச்சருமான, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தாங்கேணி பொதுவிளையாட்டு மைதான நீச்சல்தடாக நிர்மாணப்பணிகளை முடிவுக்கு கொண்டுவர தேவையான மிகுதி நிதி ஒதுக்கீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளின் பேரில் விளையாட்டுத்துறை அமைச்சு ஒதுக்கியுள்ளது.

நீச்சல்தடாக நிர்மாண பணிகளை களவிஜயம் செய்து பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நிர்மாணப்பணிகளை துரிதகதியில் முடிவுக்கு கொண்டுவரவேண்டிய அவசியம் தொடர்பாக ஒப்பந்தக்காரர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இந்த களவிஜயத்தில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் அஸ்மி ஆதம்லெப்பை, மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. ஹலீலுர் ரஹ்மான், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர்கள் உட்பட கல்முனை மாநகர சபை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்