அஞ்சல் திணைக்களத்தின் வியாபாரத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டப் பேரணி

பாறுக் ஷிஹான்

அஞ்சல் திணைக்களத்தின் புதிய நடைமுறையின் படி வியாபாரத்தை  மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் கல்முனை நகரை மையப்படுத்தி  கல்முனை பிரதம அஞ்சல் அதிபர்   யூ.எல்எம். பைஸர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி திட்டம்  அஞ்சல் மா அதிபரின் எண்ணக்கருவின் அடிப்படையில் கிழக்கு மாகாண அஞ்சல் மா  அதிபதி எம்.எச்.எம். அஸ்லம் வழிகாட்டலில் அக்கரைப்பற்று அம்பாறை பிராந்திய  அஞ்சல் அத்தியட்சகர் கே.பி.எஸ். பியந்தவின் பங்கேற்புடன் கல்முனை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி தரவைப்பிள்ளையார் கோவில் அருகில் சென்று மீண்டும் கல்முனை பிரதம அஞ்சலை பேரணி வந்தடைந்தது.

குறித்த பேரணியில் அஞ்சல் திணைக்களத்தின் புதிதாக  நடைமுறைப்படும் திட்டங்களான  கேஷ் ஆன் டெலிவரி சர்வீஸ், இஎம்எஸ், எஸ்எல் போஸ்ட் கூரியர் சர்வீஸ் உள்ளிட்ட சேவைகள்  தொடர்பாக விழிப்பூட்டல்களைத் துண்டுப்பிரசுரம் மூலம்   நகரப்பகுதி வர்த்தக நிலையங்கள் பொதுமக்கள் இடையே விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த பேரணியில் அக்கரைப்பற்று அம்பாறை பிராந்திய  அஞ்சல் அத்தியட்சகர் கே.பி.எஸ். பியந்த, கல்முனை பிரதம அஞ்சல் அதிபர் யூ.எல்எம். பைஸர் உட்பட அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்களும் பங்கேற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.