சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய சிறுவனுக்கு கௌரவிப்பு! கிளிநொச்சியில் நடந்தது

அபுதாபி கிண்ணம் 2024 சர்வதேச உதைப்பாட்ட தொடர்பில் 12 வயது பிரிவில் இலங்கை அணி சார்பாக பங்குபற்றிய கிளிநொச்சியை சேர்ந்த சுரேஸ்கண்ணா தனுஸ் என்ற சிறுவன் சனிக்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளான்.

முற்போக்கு சமத்துவ இளைஞர் அணியினரால் இச் சிறுவனை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி மண்டபத்தில் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்றது.

இலங்கை அணிசார்பாக தெரிவாகிய சுரேஸ்கண்ணா தனுஸ் அபுதாபியில் இடம்பெற்ற சர்வதேச கழங்கங்களுடனான தொடர்பில் விளையாடியிருந்தான்.

எனவே மேற்படி சிறுவனின் திறமையை பாராட்டி கௌரவிக்கும் வகையில் கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு அங்கு சிறுவனை பாராட்டி வாழ்த்துரைகள் இடம்பெற்றதோடு, பாராட்டு கேடயங்களும்
வழங்கி வைக்கப்பட்டன.

முற்போக்கு சமத்துவ இளைஞர் அணியை சேர்ந்த கபிலன் தலைமையில்  இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திகுமார், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் இ.மோகனதாஸ், சிவபாத கலையக பாடசாலை அதிபர்,
கிளிநொச்சி மத்திய கல்லூரி பிரதி அதிபர், அருட்தந்தை, விளையாட்டு வீரர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????