சிநேகபூர்வ கடினபந்து ரி20 கிரிக்கெட் போட்டி விவேகானந்தா விளையாட்டுக் கழகம் வெற்றி

(அஸ்ஹர் இப்றாஹிம்)

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்திற்கும் சாய்ந்தமருது சன் பிளவர் விளையாட்டுக்கழகத்திற்குமிடையில் காரைதீவு விபுலானந்தா விளையாட்டு மைதானத்தில் சினேகபூர்வ 20இற்கு 20 கிறிக்கட் போட்டியொன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

முதலில் துடுப்படுத்தாடிய காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது சன் பிளவர் விளையாட்டுக்கழகம் 19.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் சார்பில் சஞ்சேய் துடுப்பாட்டத்தில் 4 நான்கு ஓட்டம்  3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக  60 ஓட்டங்களையும் ,  பந்து வீச்சில் 5 விக்கட்டுக்களையும் கைப்பற்றி விவேகானந்தாவின் வெற்றிக்கு வழிவகுத்தார்