திருக்கோணேஸ்வரத்தில் சிவராத்திரி நிகழ்வை ஆரம்பித்து வைத்த கிழக்கு ஆளுநர செந்தில்!

ஹஸ்பர் ஏ.எச்

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில்  சிவராத்திரி நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சனிக்கிழமை
ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வு சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் ஆரம்பமானதுடன், தமிழ்நாடு கோவிலூர் ஆதீனத்தின் 14 ஆவது பட்டமாக விளங்கும் சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிகர் சுவாமிகளின் சொற்பொழிவு இடம்பெற்றது.

இதேவேளை எதிர்வரும்  08 ஆம் திகதி சிவராத்திரி தினம் வரை இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.