ஒலி, ஒளிபரப்பாளர் ஜிப்ரியின் நான்காவது வருட நினைவு!

எம். எப். றிபாஸ்

மறைந்த ஒலி ஒளிபரப்பாளரும் கல்வியியலாளருமான மர்ஹூம் ஏ ஆர் எம் ஜிப்ரியின் நான்காவது வருட நினைவு தின நிகழ்வு  சாய்ந்தமருது பாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் தலைவரும், சிரேஷ்ட  ஒலி, ஒளிபரப்பாளர் யூ.எல்.யாகூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏ ஆர் எம் ஜிப்ரி ஒரு ‘சகாப்தம்’ என்னும் நூல் அறிமுகமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சர்வதேச புகழ் ஒலிபரப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் முன்னிலையில் முதன்மை அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் கலந்துகொண்டதுடன் கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர்களான  ஜே.லியாக்கத் அலி, எம் எம் ஆஷீக், பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஷஹிலா ஆர் இஸ்ஸடீன், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  எம்.றம்ஸீன் பக்கீர், வெஸ்லி உயர் தர பாடசாலையின் அதிபர் எஸ். கலையரசன், மற்றும் ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், கல்வியலாளர்கள்  உலமாக்கள் என பலரும் சிறப்பதிதிகளாக பங்கு பங்குபற்றியிருந்தனர்.

நினைவுப் பேருரையை பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ்வும், நிகழ்ச்சி நெறியாள்கை  சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர்  மனிதநேயன் இர்ஷாத் ஏ காதரும் நிகழ்ச்சி ஒருங்கமைப்பை பிறை எப் எம், அறிவிப்பாளர் ஏ. ஆர். எம். நௌபீலும் நிகழ்த்தினர்.