சம்மாந்துறை புலோக் து மேற்கு மு.கா.கிளை புனரமைப்பு கூட்டம்

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்

சம்மாந்துறை புலோக் து மேற்கு 1,  கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புணரமைப்புக்கூட்டம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில்நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர்,பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ. சமால்டீன், அரசியல் அதிஉயர் பீட உறுப்பினரும், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், விளினையடி வட்டார வேட்பாளர் எம்.எம்.சௌபீர், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம், சம்மாந்துறை மத்திய குழு செயலாளர் எம்.ஜே.எம்.அஸாறுபீன்,அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.நசீர் உற்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.