நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்துக்கு நிரந்தர அதிபரை நியமிக்கக்கோரி போராட்டம்

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்துக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மாணவர்கள் ஆகியோர் கவனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நிரந்தர அதிபர் வரும்வரை போராட்டம் தொடரும் என இருந்தநிலையில் நெடுந்தீவு பிரதேசசெயலக கணக்காளர் வல்லிபுரம்சுபாசனின் உறுதிமொழிக்கமைய போராட்டம் இடைநிறுத்தப்பட்டு மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாடசாலைக்குள் பிரசன்னமாகினர்.