சுவனச்சோலை நிகழ்ச்சியில் வெற்றிபெற்றோருக்கு கௌரவம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஆர்.ஜே.மீடியா கலை, கலாசார ஊடக வலையமைப்பு மற்றும் சீகாஸ் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து இவ்வருடம் நடத்திய ரமழான் சுவனச்சோலை வினா விடை , கிராத் , அரபு எழுத்தணி போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் நாடளாவிய ரீதியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான போட்டியாளர்களில் முதல் இடங்களைப் பெற்ற போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு சீகாஸ் உயர்கல்வி நிறுவனத்துடன் இணைந்ததாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது தேசிய ரீதியில் முதலிடங்களை பெற்ற வெற்றியாளர்களுக்கு மிகப் பெறுமதியான சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி பாராட்டி
கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் சீகாஸ் உயர்கல்வி நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி செயினுலாப்தீன் நஜ்முத்தீன், ஆர்.ஜே.மீடியா கலை, கலாசார ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சமூகப்பணி இளம் கலைமாணி மாணவர் அறிவிப்பாளர் ஏ.எம். இன்ஷாப், சீகாஸ் உயர்கல்வி நிறுவனத்தின் பதிவாளர் நாயகமும் செயலாளருமான நூருல் நப்கா இல்யாஸ் மற்றும் நிகழ்வின்  பிரதம அதிதிகளாக இலங்கையிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் மொஹமட் துமிங் மற்றும் இலங்கையிலுள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் கலாநிதி ஆரிப் றிசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.