சம்மாந்துறை 07 ஆம் கிராம சேவகர் பிரிவுக்கான முஸ்லிம் காங்கிரஸ் கிளை புணரமைப்புக் கூட்டம்!

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் திங்கட்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ. சமால்டீன், அரசியல் அதி உயர் பீட உறுப்பினரும், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், விளினையடி வட்டார வேட்பாளர் சட்டத்தரணி எம்.எம்.சௌபீர், சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணி யு.கே. சலீம், தைக்கா பள்ளி வட்டார வேட்பாளர் அர்சாத் இஸ்மாயில் என கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்