கிழக்கு மாகாணத்தில் சமாதான விருது!

(கிண்ணியா நிருபர்)

கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சமாதான செயற்பாட்டாளர்கள் மூவருக்கான  கௌரவ விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எம். வை. ஹதிகத்துல்லாவுக்கான  விருது வழங்கி வைக்கும் நிகழ்வு 05 ஆம் திகதி  மாளிகைக்காடு பாபா ரோயல் விடுதியில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சமாதான செயற்பாட்டாளர்களுக்கான ‘அமைதி தலைவர்கள் விருது’ எனும் விருதே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

இந்தச் சமாதான விருதுக்கு சுமார் 50 இற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்  இதனை ‘ஜிஏஎவ்எஸ்சி’ எனும் நிறுவனம் தகுதியான மூவரை மட்டும் தேர்வு செய்தன.

திருகோணாமலை மாவட்டம் சார்பாக மௌலவி எம் ஐ எம் அதியத்துல்லாஹ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சுவிட்ஸர்லாந்து, தென்னாபிரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் கலந்து கொண்டார்கள்