பிள்ளைகளின் கற்றலில் பெற்றோர் பங்களிப்பு வேலைத் திட்டம் கல்முனை பாலிஹாவில்!

நூருல் ஹூதா உமர்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யின் சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் நீண்ட கால தேவையாக  காணப்பட்ட பிளாஸ்டிக் கதிரைகளை பெற்றோர்களின் பங்களிப்பில் வழங்கி வைக்கும் ‘பிள்ளைகளின் கற்றலில் பெற்றோர்களின் பங்களிப்பு’ எனும் தெனிப்பொருளிலான நிகழ்வு செவ்வாய்க்கிழமை இடம்பெற்று கல்லூரி முதல்வர் எ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுமார் 250 பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்குறித்த உயரிய பணியில் பங்களித்த அனைத்து பெற்றோர்கள் வாழ்வில் இறைவன் நல்லருள் புரிய வேண்டும் என்றும் மாணவிகளின் கல்வி செயற்பாடுகள் சிறப்பு பெற பிரார்த்தனை செய்வதாக கல்லூரி சார்பாக ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கல்லூரி முதல்வர் எ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் தெரிவித்தார்.