31 வருட கல்விச் சேவையாற்றிய ஆசிரிய ஆலோசகர் யூசுப்பிற்கு புதன்கிழமை பிரிவுபசார நிகழ்வு நடந்தது!

(வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் சமூக விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் எம்.பி.எம்.யூசுப்  தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றதை முன்னிட்டு அங்கு பிரிவுபசார நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எ.எல்.எ.மஜீட் ஏற்பாட்டில் கல்விசார் உத்தியோகத்தர்கள்  நலன்புரி ஒன்றியத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் வலயக்கல்விப் பணிமனையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு ஆசிரிய ஆலோசகர் யூசுப்பின் சேவைகள் பற்றி பலரும் பாராட்டி பேசினர் .

இறுதியில் அவருக்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான மஜீத், யசீர்அறபாத், நிதர்சினி,நிலோபரா உள்ளிட்ட கல்வி சார் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரிய ஆலோசகர் யூசுப் ஏற்புரை வழங்கினார்.