தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு சர்வதேச லயன்ஸ் கழகத்தால் உதவிகள்! 

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இனால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சத்திரசிகிச்சைக் விடுதிக்கு 33 லட்சம் ரூபா பெறுமதியிலான மிகவும் அவசியமான மருத்துவக் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

2021  – 2022 ஆண்டுக்குரிய மாவட்ட ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் பீற்றர் முதற்பெண் லயன் சாவித்திரி பீற்றர் தம்பதிகள் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் எஸ்.எஸ்.தங்கராஜா, லயன் டாக்டர் வை.தியாகராஜா, அனைத்து மாவட்டத் தலைவர் லயன் தேவா டி பீற்றர், லயன் பி.மகேந்திரன் ஆளுநர் சபை செயலாளர் லயன் பிரனீத் பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்;டனர்.

வைத்தியசாலைச் சமூகம் சார்பில் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி வாகீசன் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார்.

கடந்த காலத்தில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கென சர்வதேச லயன்ஸ் கழகத்தால் கிடைக்கப்பெற்ற ஒரு கோடியே 40 லட்சம் ரூபா நிதியும் உள்ளூர் லயன்ஸ்களால் சேகரிக்கப்பட்ட 52 லட்சம் ரூபா நிதியிலும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபா நிதியில் வழங்கப்பட்ட ஒட்சிசன் சுவாசத் தொகுதி அமைத்துக்கொடுக்கப்பட்டு மிஞ்சிய நிதியே இந்தச் செயற்றிட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது