பூவரசந்தீவு வடசல் பால இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகளை தௌபீக் பார்வை!

(எஸ். சினீஸ் கான்)

கிண்ணியா பூவரசந்தீவு வடசல் பால இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ் தௌபீக், திங்கட்கிழமை களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில் –

வடசல் பாலம் 2021 ஆம் ஆண்டு தன்னுடைய முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் 2023 இல் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பாலம் முடிவடையும் தருவாயில்  நாட்டில் ஏற்பட்ட விலையேற்றம் காரணமாக முழுமையாக நிறைவுபடுத்த முடியாமல் போய்விட்டது. மீண்டும் தனது முயற்சியால் மிகுதி வேலைகளுக்கான நிதியைப் பெற்று  அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் மூன்று கிழமைக்குள் வேலைகள் பூர்த்தியாகி மக்கள் பாலத்தினூடாக பயனிக்க முடியுமானதாக இருக்கும். – என்றும் தெரிவித்திருந்தார்