யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுன்னாகம் லயன்ஸ் வாழ்வாதார உதவி

 

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்த இரு குடும்பங்களுக்கு சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் வாழ்வார உதவித்திட்டமாக தலா 50 ஆயிரம் ரூபா வீதம் இன்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டது.

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களாக இருந்து அமரத்துவமடைந்த லயன் மகாதேவா – லயன் பூமாதேவி ஞாபகார்த்தமாக அவர்களின் புதல்வன் லண்டனில் வதியும் ஆளுநர் சபையின் பிரதம இணைப்பாளர் லயன் ம.பிரிதுவிராஜாவின் நிதிப் பங்களிப்பில் இந்த சேவைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சுன்னாகம் லயன்ஸ் கழக செயலாளரும் ஆளுநர் சபையின் ஆலோசகருமாகிய லயன் சி.ஹரிகரன், பிராந்தியத் தலைவர் லயன் பா.மரியதாஸ் ஆகியோர் கலந்து நிதியை வழங்கிவைத்தனர்.