ரயிலில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுமி படுகாயம்! 

 

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 

சிறுமி படுகாயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் ரயில் பெட்டியில் உணவருந்தி விட்டு கையை கழுவுவதற்காக சென்ற போது ரயிலில் இருந்து விழுந்துள்ளார்.  

 

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறுமி வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் இருந்து பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். 

 

கட்டுபாத்த கெகுனுகொல்ல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து மட்டக்களப்புக்கு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி விபத்துக்குள்ளானதாக விசாரணைகளில் தொரியவந்துள்ளது.  

 

வெலிகந்த பொலிஸ் நிலையப் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.