பாலித இறுதிக்கிரியையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

அவரது இறுதி சடங்குகள் அவர் உயிருடன் இருக்கும் போது அவர் கட்டிய கல்லறையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கடந்த 16ஆம் திகதி பிற்பகல் தனது தனியார் காணியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மத்துகம யடதொடவத்தையில் உள்ள வீட்டிற்கு அவரது சடலம் கொண்டு வரப்பட்டது.

அன்றிலிருந்து நேற்று இரவும் இன்றும் தெவரப்பெருமாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அரசியல்வாதிகள், பிரதேசவாசிகள் உட்பட பலர் வருகை தந்திருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இன்று காலை தமது கட்சிக்கும் இந்நாட்டு மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றிய  பாலித தெவரப்பெருமவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாசவும் இன்று காலை  தெவரப்பெருமவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.சளைக்க முடியாத அரசியல் தலைவரின் திடீர் மரணம் அப்பகுதி மக்களால் இன்னும் தாங்க முடியாத அதிர்ச்சியாக உள்ளது.

மறைந்த பாலித தெவரப்பெருமவின் பூதவுடலின் இறுதிக்கிரியைகள் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது.பின்னர், அன்னார் உயிருடன் இருந்தபோது தனது கல்லறையை கட்டிய பகுதிக்கு உடலைத் தாங்கிய இறுதி ஊர்வலம் பயணிக்கத் தொடங்கியது.