போதைப்பொருளுடன் கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட சுற்றிவளைப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (19) ப்ளூமென்டல் பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் கட்டான பொலிஸ் நிலையத்தில் இருந்து சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்ட நிலையில் சந்தேகநபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளார். இந்த நிலையில் பொலிஸார் துரத்திச் சென்று பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சந்தேகநபரிடம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதும்  தெரியவந்துள்ளது.