கல்முனையில் 28வது நாளாக தொடர் போராட்டம் – தீர்வு கிட்டுமா ?

(கஜனா சந்திரபோஸ்)
அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பிரதேச செயலக பிரிவுகளை வர்த்தமானிபடுத்த வேண்டிய பொறுப்பு உள்நாட்டில் உள்ள அமைச்சுக்கு உரித்துடையது எனவும் நடைமுறையில் இது மாறுபட்ட விடயமாக காணப்படுவதாகவும் உடனடியாக அமைச்சரவை தீர்மானத்தை வர்த்தமானி படுத்த வேண்டும் எனவும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்களால் 28 வது நாளாகவும் இன்றும் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை எடுக்கும் அதிகாரம் அரச அதிகாரி ஒருவருக்கு இல்லை எனவும். இருந்தபோதிலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தின் உப செயலகம் ஒன்றாக தரமிறக்கும் நோக்குடன் 1993 /07/ 28ஆம் தேதி அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் மற்றும் அம்பாறை மாவட்ட செயலகத்தின் சில அதிகாரிகள், உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சின் சில அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் இது சட்டவிரோதமான செயற்பாடு என்றும் இவற்றை கண்டித்தும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் பொது மக்கள் இணைந்து  தொடர்ச்சியாக போராட்டம் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் இன்றுவரை 28 வது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.
இல.58  1992 ம் ஆண்டின் Transfer of powers (Divisional secretaries) Act சட்டத்தின் அடிப்படையில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பிரதேச செயலகப் பிரிவுகளை வர்தமைப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உரித்துடையது . ஆனால் இதுவரை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வர்த்தமானி படுத்தப்படவில்லை.
இதேவேளை அமைச்சினால் வர்த்தமானி படுத்தப்படாமல் அமைச்சரவை அங்கீகாரத்துடன் மாத்திரம் சில பிரதேச செயலகப் பிரிவுகள் இன்றும் தொழிற்படுகின்றன.குறிப்பாக
மட்டக்களப்பு மாவட்டம் – கோறளைபற்று மத்திய பிரதேச செயலக பிரிவு
மட்டக்களப்பு மாவட்டம் – கோறளைபற்று தெற்கு பிரதேச செயலக பிரிவு 
அம்பாறை மாவட்டம் – நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவு
வவுனியா மாவட்டம் -வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவு
இதேவேளை பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகள் அமைச்சரவை அனுமதியுடன் மாத்திரம் தொழிற்பட்டதுடன் காலம் கடந்தே அவை வர்த்தமானி படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக
அம்பாறை மாவட்டம் – இறக்காம பிரதேச செயலக பிரிவு 1999 இல் ஸ்தாபிக்கப்பட்டு 2009இல் வருத்தமான படுத்தப்பட்டது.
அம்பாறை மாவட்டம் – சாய்ந்தமருத பிரதேச செயலக பிரிவு 2002ல் சாபிக்கப்பட்டு 2006ல் வர்த்தமானி படுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவு 1993 ஸ்தாபிக்கப்பட்டு 1998ல் வருத்தமான படுத்தப்பட்டது.
கொழும்பு மாவட்டம் – இரத்மலான பிரதேச செயலக பிரிவு
களுத்துறை மாவட்டம் – வெலிப்பிட்டிய ,பிட்டபத்திர பிரதேச செயலுக்கு பிரிவுகள்
அம்பாந்தோட்டை மாவட்டம்- ஒக்கேவல பிரதேச செயலக பிரிவு
 புத்தள மாவட்டம் -டன் கொட்டுவ, மாதம்பே, உடுப்பத்தற, மகாகும்பு ,பிரதேச செயலக பிரிவுகள் குருநாகல மாவட்டம் – அலவ்வ, குளியாப்பட்டிய கிழக்கு, கனேவத்த ,மல்லவாபிட்டிய,  கொட்டவெஹர பிரதேச செயலக பிரிவுகள்
அனுராதபுரம் மாவட்டம் – பளுகஸ்வெவ, விலாச்சிய பிரதேச செயலக பிரிவுகள்
ரத்னபுரி மாவட்டம் – கஹவத்த, ஒபநாயக்க, எலபாத்த பிரதேச செயலக பிரிவுகள்
அம்பாறை மாவட்டம் – காரதீவு ,கல்முனை பிரதேச செயலக பிரிவுகள் போன்ற பிரதேச செயலக பிரிவுகள் 2001 ஆம் ஆண்டு வர்த்தமானி படுத்தப்பட்டுள்ளது .
இவ்வாறான சூழ்நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் மாத்திரம் பாரபட்சமான நிலைப்பாடு காணப்படுவதாகவும் இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் என்ற கருத்தினையும் சுட்டிக்காட்டியும் இவற்றுக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் இதனை உள்நாட்டல்கள் அமைச்சும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியே இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று 28 வது நாள் பிற்பகல் பெரியநீலாவணை பொதுமக்கள் நடைபவனியாக போராட்டக்களத்தை வலுச்சேர்க்கும் நோக்குடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள போராட்ட களத்தை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.