கைதானார் கல்முனை மாநகர சபை முன்னாள் கணக்காளர்

போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்  பெயரில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்மையில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் கைதான சந்தேக நபர் ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பெரிய நீலாவணை பொலிஸார் துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம், கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராமும் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றிய 39 வயது மதிக்கதக்க சந்தேக நபர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தே நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை   பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.