பா.உ முஷாரப் க்கு சரவெடி பதில் – முன்னாள் தவிசாளர் ஜெயசிறில்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் அதிசயராஜ் அரசியல் நடத்துவதாக காரைதீவு அபிவிருத்திக்குழு  கூட்டத்தில் மிகவும் கேடத்தனமான, ஏற்றுக்கொள்ள முடியாத, மனவேதனையான கருத்து ஒன்றை காரைதீவு ஒருங்கிணைப்பு தலைவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முஷாரப் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை வன்மையான கண்டிப்பதாக காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.

காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் தொடர்பான தெளிவூட்டல் ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இக்கருத்தினை தெரிவித்திருந்தார்.

காரைதீவு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றபோது காரைதீவு,கல்முனை வடக்கு, நாவிதன்வெளி ஆகிய  தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் கல்முனையில் போராட்டம் நடைபெறுவதாகவும் அங்கு அபிவிருத்தி குழு கூட்டங்கள் நடைபெறவில்லை எனவும் நாவிதன்வெளியிலும் தமிழ் மக்களுக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார் .

அதே போன்று காரைதீவு மக்களுக்கும் குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தனது கேள்விக்கு பதில் வழங்குகின்றபோதே அவர் கல்முனை பிரதேச செயலகம் ஒரு உப பிரதேச செயலகமாகவும் அதை பிரித்து வழங்க முடியாது என்றும் அதை முன்னாள் அரசாங்க அதிபர் உப பிரதேச செயலகம் என்றும் கல்முனை பிரதேச செயலக ஆதிக்கத்திற்குள்தான் இருக்கும் என்றும் அந்த இடத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக ஆலைய தர்மகர்த்தாக்கள் தன்னிடம் உதவி கேட்டு வந்ததாகவும் குறிப்பிட்ட அவர் , தான்தோன்றித்தனமாக இந்த நிதி ஒதுக்கீட்டில்  தமிழர்களுக்கு குறைவாக ஒதுக்கியதன் காரணமாக இன்று இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்து காரைதீவு சிவில் அமைப்புக்களும் காரைதீவு மக்களும் ஒன்று திரண்டிருந்தனர். இருந்த போதிலும் நங்கள் இதனை மூன்று கட்டங்களாக யோசனை செய்து முதலில் சமாதான அடிப்படையில் ஆலோசனை செய்து இந்த விடையத்தில் காய் நகர்த்துவோம் என்றுதான் இந்த ஒருங்கிணைப்பு குழு நடைபெற்றது.

அனால் காரைதீவு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே கல்முனை பிரதேச செயலகம் தொடர்பாக உண்மையிலே ஏற்றுக்கொள்ளமுடியாத கருத்துக்களை கூறியிருக்கிறார். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு  பிரதேச செயலகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் அருகாமையில் இருக்கக்கூடிய பிரதேச செயலக பிரதேச செயலாளரும் சில அரசியல்வாதிகளும் குறித்த வடக்கு பிரதேச செயலகத்திற்கு உரிமை அல்லது அதிகாரங்களை வழங்காமல் சில அரசியல் விளையாட்டுகளை செய்து வருகின்றார்கள்.அதன் ஒரு அங்கமான அரசியல் பின்னணியில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பாராளுமனற உறுப்பினர் முஷாரப் இருக்கின்றார் என்கின்ற சந்தேகம் தனக்கு எழுவதாக முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிட்டுள்ளார்.

கரணம் இவர் தனது வாப்பா வீட்டு சொத்து போன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உப பிரதேச செயலகம் என்று சொல்வதற்கு அவரிடம் எந்த ஆதாரம் இருக்கின்றது. குறித்த பிரதேச செயலகத்தின் அமைச்சரவை அங்கீகரிக்கப்பட்ட கடிதங்கள் அனைத்தும் பொய் என்றால் இவர் எவ்வாறு அவ்வாறு சொல்லமுடியும் ? எனவும் ஆகையால் மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத கருத்தும் தமிழ் மக்களின் அதிகாரங்களும் உரிமைகளையும் பறிப்பதோடு தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற அபிவிருத்தியையும் முடக்கி அவர்களுடைய அரசியளுக்காகவும் அவர்களுடைய மக்களுக்காகவும் கொண்டு செல்கின்றார்கள். ஆகையால் இவ்வாறான  அபிவிருத்தி குழு தலைவரை எந்த பிரதேச செயலக மக்களும் ஏற்கொள்ள முடியதொரு  தீர்மானங்களையும் நாங்கள் எடுக்கவேண்டி இருக்கின்றது .

அணைத்து முஸ்லீம் பிரதேச செயலகத்தில் இருக்கக்கூடிய பிரதேச செயலாளர்கள் நிர்வாகம் செய்கின்றார்கள். ஆனால் தமிழ் பிரதேச செயலாளர் மாத்திரம் அரசியல் செய்கின்றார் என இவர் கூறிய விடயம் என்பது தமிழ் பிரதேச செயலாளர் அனைவரையும் தலைகுனிய செய்கின்றது .இவ்வாறான பேச்சுக்களை நீங்கள் பேசக்கூடாது இது உண்மைக்கு புறம்பான கருது என நான் கூறியபோது என்னை இனவாதியாக சித்தரித்தார். இவர் மாத்திரம் என்னை இனவாதியாக சித்தரிக்கவில்லை கடந்த அபிவிருத்துக்குழு கூட்டம் அரச அதிபர் தலைமையில் நடந்தபித்து அதாவுல்லாவும் என்னை இனவாதி என்று சொன்னார்கள் .

இவர்கள் நாங்கள் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றபோது பிரதேச செயலகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கின்றபோது இவ்வ்வாறான காலகட்டத்தில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் கேட்டதை தான் இவர்கள் கேட்கின்றார்கள் அல்லது இவர்கள் இனவாதி என்று  பலமுறை சித்தரித்திருக்கின்றார்கள். அதேபோன்று காரைதீவு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலகம் தொடர்பாக பேசியதற்கு காரணம் என்ன? பின்னணி அரசியலில் அதிகார பறிப்பிற்கு காரணமாக இருப்பதில் இவரும் ஒருவர் என்பதை தான் தெளிவாக கூறுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் நல்லிணக்கம் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் குறிப்பிட்டாலும் இவ்வாறான அபிவிருத்திக்குழு தலைவர்கள்தான் இங்கிருக்கின்ற நல்லிணக்கத்தையும் குழப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.ஆகையால் இவ்வாறான அபிவிருத்திகுழு தலைவர்களை நாங்கள் புறக்கணித்து பொதுவான சிந்தனையோடு பொதுவாக ஒதுக்கக்கூடிய அபிவிவிருத்திக்குழு தலைவர்தான் எங்களுடைய தமிழ் பிரதேச செயலகங்களுக்கு தேவை என்ற கருத்தினையும் இதன்போது ஜெயசிறில் தெரிவித்திருந்தார்.