ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் அமைச்சர் ரொஷான்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவர் என தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த தெரிவித்துள்ளார்.

பலபிட்டியவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு 22 மாவட்டங்களில் தனது கட்சி வேட்பாளர்களை முன்னிறுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், ஊழலுக்கு எதிரான அமைச்சர்கள் பலர் தனது கட்சியைச் சுற்றி திரளப் போவதாகவும் குறிப்பிட்டார்.