மகள்,மகளின் தோழியை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை கைது

12 வயது மகளையும் அவரது 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர்.சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.