மின்னல் தாக்குதலில் சகோதரங்கள் பலி

இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக தெரியவந்துள்ளதுடன் வெல்காலயாய , இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு  உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.