மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்த குசல் மெண்டிஸ்

2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் போது இந்தியாவுக்கு எதிரான போட்டி தான் விளையாடிய சிறந்த போட்டி என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரபல ஊடக உரையாடல் நிகழ்ச்சியில் நேற்று (29) இணைந்துகொண்ட போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார் .

அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தானும் தனுஷ்க குணதிலகவும் துடுப்பெடுத்தாடும் போது எம்மை பார்த்து சிரித்தது மறக்க முடியாத சம்பவம் என்று குசல் மெந்திஸ் மேலும் தெரிவித்துள்ளார்.