3 தனியார் பேரூந்துகளிற்கு ஆப்பு

வவுனியாவிலிருந்து சேவையில் ஈடுபடும் 3 தனியார் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு அவைகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

மூன்றுக்கு மேற்பட்ட விபத்துக்களை ஏற்படுத்தியமை, வீதியில் போட்டித்தன்மையில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் இச் செயற்பாடு மக்கள் மத்தியின் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளமையுடன் தொடர்ந்தும் பயணிகளின் சுதந்திரமான பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் பேரூந்துகளுக்கு எதிராக நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.