கிரிக்கெட் மட்டையால் சிறுவன் உயிரிழப்பு

இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் ஒரு மாணவர் மற்றைய மாணவனின் தலையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில், தாக்கப்பட்ட மாணவன் உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டி – மொன்டகிரிஸ்டோ பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 13 வயதுடைய பாடசாலை மாணவர் எனவும், தாக்குதலுக்கு உள்ளான 14 வயது மாணவனை நாவலப்பிட்டி பொலிசார் நாவலப்பிட்டி நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் சந்தேகத்துக்குரிய மாணவனை மே மாதம் 6 ஆம் திகதி வரை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவின் பொறுப்பில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.