பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா?

எரிபொருள் விலை குறைப்புடன் பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா? இல்லை? என்பது தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதுடன், இதன்போது டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டது.

ஆனால், கடந்த இரு முறை எரிபொருள் விலையேற்றத்திலும் பேருந்து கட்டண திருத்தம் செய்யப்படாததால், வரும் ஜூலை மாதமே கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டும் என பேருந்து சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதற்கமைய எரிபொருள் விலை குறைவினால் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளது.