போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் தெரிவித்து வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் பெறும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் என தெரிவித்து தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு உபுல் ரோஹன, வர்த்தகர்களிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.